தொடர்புடைய செய்திகள்
- அப்பா, அண்ணன்னு நினைச்சேன்.. என்ன சீரழிச்சிட்டாங்க! – கலங்க வைக்கும் வளர்ப்பு மகளின் கதை!
- உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு குடமுழுக்கு! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
- அஸ்வின் போட்ட ஒரே ஓவரில் மேட்ச்சை மாற்றிய தினேஷ் கார்த்திக்… மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்!
- 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- மூலப்பொருட்கள் கடும் விலையேற்றம்! – தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டம்!
வெப்பச்சலனத்தால் இன்று மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து குளிர்காலமும் முடிந்து வெயில்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் அரிதாக கடந்த மார்ச் மாதம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி தமிழகம் நோக்கி வந்தது. இதனால் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் சில பகுதிகளில் ஓரளவு மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
