இன்னும் சில மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்னும் சில மணி நேரத்தில் சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் நேற்று கூட சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என்று இந்த மழை காலை 10 மணி வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Edited by Siva