1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2023 (18:53 IST)

அரசியலுக்கு திட்டமா? விஜய் மக்கள் இயக்க பொ.செ., புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

vijay
மக்களுக்கு சேவை செய்வதுதான் எங்களின் அடுத்த கட்ட பரிமாணம் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தின், மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட 1000 பேர் பங்கேற்றனர்.

விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேற ஒரு பரிமாணம் எடுக்க உள்ளது என்றும் தமிழ்நாடு அளவில் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் செயல் பட்டு வருகிறது என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புஸ்ஸி ஆனந்த்,

''இதற்கு முன்பாகவும் ஐடி விங் கூட்டம் நடைபெற்றது. ஆனால் மாவட்ட வாரியாக நடைபெற்றது. இம்முறை தமிழகம் முழுவதும்  உள்ள தகவல் தொழில்  நுட்ப நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டனர்.  நம்மை பற்றி யார் என்ன கூறினாலும், அதற்குப் பதில் நாகரீகமாக கொடுக்க வேண்டும். இயக்க பணிகள் மட்டும் பார்த்துக் கொண்டு நாம் இருக்க வேண்டும் என்று தளபதி கூறியுள்ளார் என்பதை கூறினோம். இன்று நிர்வாகிகளுக்கு ஐடி கார்டு கொடுத்தோம். மக்களுக்கு சேவை செய்வதுதான் எங்களின் அடுத்த கட்ட பரிமாணம், லியோ படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை '' என்று கூறினார்.