ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (17:04 IST)

234 தொகுதிகளிலும் 30ஆயிரம் பேரை நிர்வாகிகளாக நியமிக்க விஜய் திட்டம்!

30ஆயிரம் பேரை 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளாக நியமிக்க விஜய் மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தின், மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட 1000 பேர் பங்கேற்றனர்.

விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேற ஒரு பரிமாணம் எடுக்க உள்ளது என்றும் தமிழ்நாடு அளவில் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் செயல் பட்டு வருகிறது என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அதில் அனைத்து தொகுதிகளிலும் செயலாளர்கள். இணை செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 30ஆயிரம் பேரை 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளாக நியமிக்க விஜய் மக்கள்  இயக்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.