வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (07:48 IST)

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 மாணவர்கள் பரிதாப பலி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்த நிலையில் இரண்டு மாணவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க இரண்டு மாணவர்கள் வந்த நிலையில் அந்த மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது.
 
 இந்த இரண்டு மாணவர்களும் சமீபத்தில் நடந்த நீர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் மருத்துவ கல்லூரியில் சேர இருந்த நிலையில் இந்த துக்ககரமான சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
செம்பரப்பாக்கம் ஏரியில் மூழ்கி பலியான இரண்டு மாணவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva