திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (13:10 IST)

நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

rain
நாளை முதல் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை எதுவும் இல்லை என்பதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் கோடை காலம் தொடங்க உள்ளதை அடுத்து படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது என்பதும் ஒரு சில பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ் வெயில் இப்போதே தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நாளை முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் கீழ் திசை காற்றால் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தொடர்ந்து வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva