செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (08:32 IST)

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நேற்று ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழ்நாட்டில் இன்று தஞ்சை, அரியலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர் ,மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது