ரூ.6 லட்சம் பெர்சனல் லோன்: வங்கி கொடுத்த அழுத்தத்தால் வாலிபர் தற்கொலை!
கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் என ரூபாய் 6 லட்சம் கடன் வாங்கிய வாலிபர் ஒருவர் வங்கி நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கடன் நெருக்கடி காரணமாக கிரெடிட் கார்டு மூலமும் பெர்சனல் லோன் மூலமும் தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கியுள்ளார். இந்த கடன்கள் வட்டியுடன் சேர்த்து ரூபாய் 6 லட்சம் நெருங்கியதை அடுத்து வங்கி ஊழியர்கள் பணத்தை தவணை முறையில் கட்டுமாறு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது
ஊரடங்கு மற்றும் வேலையின்மை காரணத்தினால் அந்த வாலிபரால் பணத்தை வங்கிக்கு கட்டமுடியாததை எடுத்து வங்கி அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக சற்று முன் அவர் தற்கொலை செய்துகொண்டார். கடன் நெருக்கடியால் வங்கி ஊழியர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் கடன் நெருக்கடி காரணமாகவும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் வாங்கி பலர் துன்பப்பட்டு வந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த இரண்டையும் தவிர்க்குமாறு பொருளாதார ஆலோசகர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது