செல்போனை பிடுங்கியதால் தற்கொலை செய்த சிறுவன் !!

Sinoj| Last Modified செவ்வாய், 5 ஜனவரி 2021 (21:52 IST)
 

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் ஒரு சிறுவன் ஆன்லைனில் கேம் விளையாட செல்போன் கொடுக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சீதாராம் படெல். இவர் சாலையோர உணவு விற்பனை செய்துவரும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் நான்காவது படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் ஃப்ரீ பையர் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளான். இதனால் அவனது தந்தை செல்போனை அவனிடமிருந்து பிடுங்கிவிட்டார்.

இதனால் மனம் உடைந்த சிறுவன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.

இதுகுறித்து சீதாராம் பட்டேல் கூறும்போது, மகன் கேம் விளையாடக்கூடாது என்பதற்காக செல்போனை வாங்கிவைத்தேன். ஒவ்வொரு முறை வாங்கிவைத்தபோதெல்லாம் அவன் விரக்தியடைந்தான். இப்போது விபரீதம் நடந்துவிட்டது. அதனால் அரசு இந்த விளையாட்டை தடை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :