Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்திய பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்பு: முக்கிய அறிவிப்பு..!

Written By Mahendran
Updated: வியாழன், 8 ஜூன் 2023 (11:06 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் என்ற நான்காண்டு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் படிக்கக்கூடிய பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் என்ற நான்காண்டு பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்து தகவலை சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. 
 
இந்த படிப்புக்கு ஜூன் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த படிப்பில் சேர ஜேஈஈ நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த படிப்பிற்கு வயது வரம்பு கிடையாது என்றும் தகுதி உள்ளவர்கள் www.study.iitm.ac.in/es என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை ஐஐடியின் இந்த புதிய படிப்பை படிக்க விரும்புபவர்கள் உடனடியாக இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ரொம்ப பயந்துட்டோம்!.. மறுபிறவி எடுத்திருக்கோம்!.. நேபாளத்தின் பச்சை வீட்டின் உரிமையாளர் பேட்டி..

மேட்டூரில் மூதாட்டிக்கு விஜய் பரிசளித்த சன் கிளாஸ்!.. விலை என்ன தெரியுமா?..

நேபாள வெள்ளம்!.. ஒரே வீட்டில் 23 உடல்கள்.. 1000 பேர் பலி!..

தங்கம் வாங்க வேண்டாம்!. மோடி போட்ட வீடியோவால் பங்கு சந்தையில் வீழ்ச்சி!...

நேபாள பேரிடர் எதிரொலி!.. பனிப்பாறைகளில் சென்சார் வைக்கும் பணி தீவிரம்..

அடுத்த கட்டுரையில்
Show comments