ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 19 ஜூலை 2023 (13:41 IST)

உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி! – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ITI
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு இடஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.



தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி மையங்கள் பல செயல்பட்டு வருகின்றன. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து தொழில் வாய்ப்பை பெற இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தொழிற்பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, இலவச மடிக்கணினி, சைக்கிள், பாடப்புத்தகங்கள், சீருடை, வரைப்பட கருவிகள், இலவச பஸ் பாஸ் ஆகியவை அரசால் வழங்கப்படுகிறது.

அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களில் அமைக்கப்பட்டு சேர்க்கை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவடைய உள்ளது.

Edit by Prasanth.K