புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:32 IST)

பம்பர் டூ பம்பர் காப்பீடு நிறுத்திவைப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு!

செப்டம்பர் 1 முதல் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்வது கட்டாயம் என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுக்கான காப்பீடு செய்வது கட்டாயம் என்று சமீபத்தில் ஈரோடு தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காப்பீடு மன்றம் தொடுத்துள்ள மனுவில் புதிய திட்டத்திற்கு ஏற்ப மென்பொருளில் மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் கோரியிருந்தது.

இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயமாக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.