1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (12:17 IST)

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுமா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

நடப்பு ஆண்டு மருத்துவ படிப்புகளில் தமிழகத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளின் அகில் இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக அரசின் கொள்கைப்படி 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. மத்திய அரசின் முறைப்படி 50% அதிகமான இடஒதுக்கீடுகள் அனுமதிக்கப்படாத நிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு குறித்த இழுபறியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் ”தமிழக மருத்துவ படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீடு இடங்களில் 69% இட ஒதுக்கீடு 2021-22ம் கல்வியாண்டில் அமல்படுத்தப்படுமா?” என்பது குறித்து தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.