வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (14:51 IST)

85 சதவீதம் கல்வி கட்டணம்; 6 தவணைகள் – தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கபடாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தனியார் பள்ளிகள் நடப்பு ஆண்டில் மொத்த கல்வி கட்டணத்தில் 85% மட்டுமே வசூலிக்க வேண்டும். கல்வி கட்டணத்தை பெற்றோர்கள் 6 தவணைகளாக பள்ளிக்கு செலுத்தலாம். பள்ளிகளின் கட்டணம் அதிகமாக இருப்பதாக கருதினால் பெற்றோர்கள் பள்ளியை அணுகி கட்டணத்தை குறைக்க கோரலாம். கல்வி கட்டணத்தை காரணம் காட்டி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்குதல் போன்ற செயல்களை பள்ளிகள் மேற்கொள்ள கூடாது என கூறப்பட்டுள்ளது.