புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (15:03 IST)

ரெட் அலர்ட்: கஜா புயலில் இருந்து சென்னை எஸ்கேப்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி சென்னை - நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கவுள்ளது என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 
 
மேலும் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெறிய ஆபத்து ஏதும் இருக்காது என தற்போதைய செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு, 
 
கஜா புயல் நவம்பர் 15 ஆம் தேதி முற்பகல் நாகை - சென்னை இடையே கரையை கடக்கும். இதனால் நவம்பர் 14 ஆம் தேதி இரவு முதல் புயல் கரையைக் கடக்கும் வரையில் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும்.
 
சென்னையை பொருத்தவரை மழை இருக்கும், ஆனால் புயலின் பாதிப்பு இருக்காது. புயலை ஒட்டி இருக்கும் மழை இருக்கும், காற்றின் வேகம் இருக்காது. மழைக்கான ரெட் அலர்ட் நிர்வாகத் துறையினரை எச்சரிச்ச கொடுக்கப்பட்டுள்ளது. அது பொதுமக்களுக்கானது அல்ல என வானிலை ஆய்வு மையம் தகவ்ல் வெளியிட்டுள்ளது.