புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (12:11 IST)

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் எத்தனை உயிரிழப்புகள்?

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
தமிழக மக்களை தற்பொழுது டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. அன்றாடம் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் என பலர் உயிரிழக்கின்றனர். மேலும் பலர் டெங்கு மற்று பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என கேள்வி எழுப்பியது. நவம்பர் 20ந் தேதிக்குள் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரத்தை சுகாதாரத்துறை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.