புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 நவம்பர் 2018 (08:36 IST)

கஜா புயல் எதிரொலி: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி அதற்கு 'கஜா; என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தா புயல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய பகுதிகளுக்கு இடையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கஜா புயல் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பலதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த புயலால் சென்னையிலும் பாதிப்பு ஏற்படும் என்பதால் சென்னை உள்பட புயல் தாக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடத்தப்படுகிறது.

சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்னும்  2 அல்லது 3 நாட்களில் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த புயல், வர்தா புயல் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.