செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (09:17 IST)

ரூ.5,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றுவதாக கடந்த சில மாதங்களாக புகார் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதும் இது குறித்து சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரு சில கட்டிடங்களில் இருந்து மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை அடுத்து சென்னை மாநகராட்சி இன்று இதுகுறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது
 
சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு செய்யும் கட்டட உரிமையாளர்களுக்கு ரூபாய் 5000 முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
சென்னையை அழகுபடுத்துவதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது