திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (12:04 IST)

சென்னையில் தனியார் கொரோனா சிகிச்சை மையம்! – மாநகராட்சி அனுமதி!

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தனியார் உணவகங்கள், மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடுதல் கொரோனா சிகிச்சை பிரிவுகள், படுக்கைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில் பாதிப்புகள் மேலும் அதிகமாகி வருவதால் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவது குறித்து சென்னை மாநகராட்சிக்கு இமெயில் அனுப்பிவிட்டு பணியை தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது.