1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (11:31 IST)

பிரட்லி கொடுத்த பிட்காயின்.,. இந்திய மக்களுக்கு உதவும் கரங்கள்!

ஆஸி வீரர் பேட் கம்மின்ஸுக்கு பிறகு அந்நாட்டு வீரர் பிரட்லியும் இந்தியர்களுக்கு உதவும் விதமாக 40 லட்சம் மதிப்புள்ள பிட்காயினை நன்கொடையாக கொடுத்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் ஆஸியின் பேட் கம்மின்ஸ். நடப்பு சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் அவரும் ஒருவர். இந்நிலையில் இப்பொது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பிரதமர் நிவாரண நிதிக்கு 50000 டாலர் நன்கொடையாக அளித்துள்ளார். இதுபோல மற்ற வீரர்களும் நிதியளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது ஆஸி முன்னாள் வீரர் பிரட் லீ தனக்கு எப்போதுமே இந்தியா இரண்டாவது தாய் வீடு போல என்று கூறு 40 லட்சம் மதிப்புள்ள 1 பிட்காயினை அன்பளிப்பாக அளித்துள்ளார். அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன.