சென்னையில் குறைய தொடங்கியதா பாதிப்பு? – இன்றைய நிலவரம்!
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் திரு.வி.க நகரில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,607 பேரும், தண்டையார் பேட்டையில் 5,355 பேரும், தேனாம்பேட்டையில் 5,213 பேரும், கோடம்பாக்கத்தில் 4,794 பேரும், அண்ணா நகரில் 4,766 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் ஆயிரத்தை நெருங்கி வருகின்றன.