1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today petrol diesel price

மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை! – இன்றைய நிலவரம்!

Tamilnadu
கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை நேற்றிலிருந்து மாற்றமில்லாமல் விற்பனையாக தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. இந்நிலையில் இன்று விலையேற்றம் ஏதுமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.83.04க்கும், டீசல் லிட்டர் ரூ.76.77க்கும் விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில்தான் கம்மியாம்- உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!