தலைநகரில் தலைத் தூக்கும் கொரோனா: லாக்டவுன் கைகொடுக்குமா?
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்.
நேற்று தமிழகத்தில் 2,141 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 2000ஐ விட அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2141 பேர்களில் 1373 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,070 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,828 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தண்டையார்பேட்டை - 4,743; தேனாம்பேட்டை - 4,504; கோடம்பாக்கம் - 3,959; அண்ணாநகர் - 3,820; திரு.வி.க நகர் - 3,244; அடையாறு - 2,144; வளசரவாக்கம் - 1,571; திருவொற்றியூர் - 1,370, அம்பத்தூர் - 1,305 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.
இந்நிலையில் இன்றும் முதல் பொதுமுடக்கம் ஜூன் 30 ஆம் தேதி வரை அமலாகியுள்ளதால் பாதிப்பு குறைய வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.