தொடர்புடைய செய்திகள்
- அடபோங்கடா டேய்: அரசுக்கு கொட்டி கொடுக்கும் வாகன ஓட்டிகள்!!
- அட போங்கடா எனக்கே சலிச்சு போச்சு... அப்போ போலீஸுக்கு எப்படி இருக்கும்..?
- ஹிஹிஹி... ஊரடங்கு பார்த்து பயந்த கொரோனா? குறையும் எண்ணிக்கை!
- ரூ10-க்கு மனித உயிர் காக்கும் மருந்து: கொரோனாவை அழிப்பது சாத்தியமா?
- கொரோனா அதிகரிப்பதை போல அதிகரிக்கும் ஊரடங்கு வசூல்!!
மீண்டும் பழைய கதை தான்: எகிறியது கொரோனோ எண்ணிக்கை!
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்.
நேற்று தமிழகத்தில் 2,174 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஒரே நாளில் 2000ஐ விட அதிகமாகவும், மொத்தம் 50 ஆயிரத்தை விட அதிகமாகியும் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2,174 பேர்களில் 1,276 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,626 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தண்டையார்பேட்டை - 4,549; தேனாம்பேட்டை - 4,339; கோடம்பாக்கம் - 3,801; அண்ணாநகர் - 3,636; திரு.வி.க நகர் - 3,160; அடையாறு - 2,069; வளசரவாக்கம் - 1,497; திருவொற்றியூர் - 1,324, அம்பத்தூர் - 1,234 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.
