செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (09:22 IST)

மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் முழுவதுமாக அகற்றம்

சென்னையில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் முழுவதுமாக அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல். 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்து நான்கு நாட்கள் ஆகியும் சில இடங்களில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். 
 
ஆனால், சென்னையில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் முழுவதுமாக அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் வெள்ளத்தில் மூழ்கிய 14 சுரங்கப்பாதைகளில் மழைநீர் முழுவதுமாக அகற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.  
 
மேலும், தொடர் மழையால் சென்னையில் விழுந்த 116 மரங்களும் அகற்றப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 7,180 புகார்களில் 3,593 புகார் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.