1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (08:25 IST)

விலையில் மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் & டீசல்!!

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

 
பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசும் ஒரு சில மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்து நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே நிலையில் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று விலையிலேயே விற்பனையாகி வருகிறது. ஆம், இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று ஒரு லிட்டர் சென்னையில் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது.