1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (17:40 IST)

செம்பரம்பாக்கம் ஏரியில் 3000 கன அடி நீர் திறப்பு: அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை 3000 கன அடி தண்ணீர் திறக்க திட்டமிட்டு இருப்பதால் அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புயல் காரணமாக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் முன்கூட்டியே செம்பரம்பாக்கம் ஏரியில்  அதிக அளவு நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்திருப்பதால், அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும், மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran