1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J. Durai
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (19:28 IST)

வீராணம் ஏரியை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கிட்டத்தட்ட 16 ஆம் நூற்றாண்டில் பராந்தக சோழன் புதல்வன் ஆதித்யராஜ சோழன் என்பவரால் போர் புரியும் படைவீரர்களைக் கொண்டு வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று வீரநாராயண பெருமாள் ஏரி.


இது காலப்போக்கில் வீராணம் ஏரி என்று அழைக்கப்பட்டு வருகிறது இதன் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும் 25 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரி தற்போது வரை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பாசன ஏரியாக விளங்குகிறது.

இந்த ஏரி தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவான வகையில் அமைந்துள்ளதால் இந்த ஏரியை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை  இப்பகுதி மக்களுக்கு அர்பனிப்பு செய்யும் வகையில் பொதுப்பணி துறையின் சார்பில் இன்று கந்தகுமாரன் ஊராட்சியில் பள்ளி மாணவர்களை கொண்டு சிறிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்:
ஏரியின் வரலாற்றுப் பின்புலத்தை கண்டு வியப்புற்றார் மாவட்ட ஆட்சியர் இதைசுற்றுலா தளமாக மாற்றவும் சம்மதம் தெரிவித்தார். மாணவர் மத்தியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர். கல்வி ஒன்றே முக்கியத்துவம் வாய்ந்தது. எனவும் நன்கு படித்து அரசு முக்கியத்துவம் வாய்ந்த உயர் பதவிகளை  அடையவேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.