1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (11:33 IST)

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

Vadapalani Murugan Temple
சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என முழக்கமிட்டனர்.
 
சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் 7ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
 
வழியெங்கும் பக்தர்களின் 'அரோகரா... அரோகரா...’ கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மேள தாளம் முழங்க பக்தர்கள் ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து தேரில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தியை வழிபட்டனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு முருக பக்தர்களால் கோவில் வளாகம் களைகட்டியது.


பக்தர்களுக்கு மோர், குடிநீர், அன்னதானம் ஆகியவற்றை வழங்கப்பட்டது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு வடபழனி போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தேர் நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.