திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (13:33 IST)

10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்.. கும்பகோணம் சாரங்கபாணி கோயில் விழாவில் பரபரப்பு..!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில் பத்தடி பள்ளத்தில் தேர் சக்கரம் சிக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சித்திரை திருவிழாவை ஒட்டி கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பக்தர்கள் சாரங்கா சாரங்கா என முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர் 
 
அப்போது திடீர் என தேர் சக்கரம் பத்தடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர் வந்த சாலையில் இருந்த குடிநீர் தொட்டி பகுதியில் திடீரென சாலை பத்தடி ஆழத்தில் உள்வாங்கியதாகவும் அதில் தேரின் முன் சக்கரம் சிக்கிக்கொண்டதால் தேர் தெற்கு புறமாக சாய்வதற்கு வாய்ப்பு உள்ளதால் ராட்சச இயந்திரம் மூலம் தேர் தூக்கி பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கொத்தனார்கள்  கருங்கல் மற்றும் ஜல்லிகளை கொண்டு பள்ளத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாக புறப்படுகிறது. இந்த நிலையில் தேரோடும் வீதிகளில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
Edited by Mahendran