வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (18:43 IST)

ரஜினி வரமாட்டார், கமலை வர விடமாட்டார்கள்: சாருஹாசன்

தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத நிலையில் பலர் அரசியலுக்கு வந்து முதல்வராக துடித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர்களுக்கு அரசியல் ஆசை உள்ளது.


 


இந்த நிலையில் நேற்று கமல் தனது அரசியல் வருகையை உறுதி செய்துவிட்டார். நாளை ஒருவேளை கட்சியை அவர் அறிவிக்கலாம், அல்லது வெகுவிரைவில் அறிவிக்கலாம். அதேபோல் ரஜினியும் எந்த நேரத்திலும் அரசியலில் குதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன், 'ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றும், கமல்ஹாசனை அரசியலுக்கு வர விடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். ரஜினி, கமல் இருவரை பொருத்தவரையில் கமல் அளவுக்கு பொதுப்பிரச்சனையில் ரஜினி குரல் கொடுக்கவில்லை என்று கூறிய சாருஹாசன், கமல்-ரஜினி இருவரும் சேர்ந்து அரசியல் கட்சி ஆரம்பித்தால் கூட 10% ஓட்டுக்கள் மட்டுமே பெற முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தை போல ஒரு சினிமா பைத்தியம் உள்ள மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என்றும், இங்கு மட்டும்தான் அரசியலில் அதிகளவில் நடிகர்கள் இடம்பெறுவதாகவும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.