புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (10:46 IST)

இன்று ரஜினியை சந்திக்கின்றாரா பிரதமர் மோடி?

இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தினந்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வருகிறார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.



 
 
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், பிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், நல்லக்கண்ணு, வாசன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்
 
ஒரே நிகழ்ச்சியில் ரஜினியும் மோடியும் கலந்து கொள்வதால் இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழா முடிந்தவுடன் பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்கவுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.