புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (14:27 IST)

முதுகெலும்பு இல்லாத தொடை நடுங்கி கமல்: எச்.ராஜா தாக்கு

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது பிறந்த நாளின்போது அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு அறிவிக்கவுள்ளதாகவும், மக்களை தன்னுடன் இணைக்கும் வகையில் ஒரு செயலி வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.



 
 
இந்த நிலையில் நேற்று தனது ரசிகர்களிடையே பேசிய கமல், தமிழகத்தில் ஒரு ஏரியை காணவில்லை என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது டுவிட்டரில் கூறிய எச்.ராஜா, 'ஒரு ஏரியக் காணவில்லையாம் தன் ரசிகர்களை தேடச் சொல்லப்போகிறேன் என்கிறார் கமல். மதுரை உயர்நீதிமன்றமே ஏரியின் மீது தான் உள்ளது. பாவம் மக்கள்' என்று கூறியுள்ளார்.
 
மேலும் தமிழிசை செளந்தராஜனின் 'இந்துதீவிரவாதம் என்று கொளுத்திப்போடுவது சுயரூபமா? இல்லை விஸ்வரூபம் 2 புதுப்படம் ஓட வைக்க பொய் விஸ்வரூபமா?' என்ற டுவிட்டுக்கு பதிலளிக்கும் வகையில் எச்.ராஜா பதிவு செய்த டுவீட்டில் 'முதுகெலும்பு இல்லாத, தொடை நடுங்கியின் பிதற்றல் அவ்வளவுதான். பி ஜே இவரின் கோழைத்தனத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார்' என்று கூறியுள்ளார்