வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (11:55 IST)

வஞ்சிக்கப்படும் தமிழக மக்கள்: மேகதாது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

மேகதாதுவில் அணை கட்ட  கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய சுற்றுசூழல் அமைச்சகம்.
கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவிடாமல் எப்பொழுதும் அலைக்கழிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு மழை அதிகளவில் பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 
கர்நாடகாவில் காவிரி குறுக்கே தண்ணீர் தேக்கி வைக்க 4 அணைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் காவிரி தண்ணீரை தேக்கி வைக்க மேட்டூர் அணை மட்டுமே உள்ளது. 
 
இந்த சூழ்நிலையில் கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. பலமுறை கர்நாடக முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்தித்து இதுகுறித்து அழுத்தம் தந்தார். இதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என தமிழக அரசும் மத்திய அரசிடம் முறையிட்டது.
இந்நிலையில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவது சம்மந்தமாக அனுப்பிய வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசு இதற்கு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.