மட்டமான மத்திய அரசு: 5000 கோடி கேட்டா 500 கோடி தராங்க...
இயற்கை சீற்றங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று காலை நாகை மாவட்டம் அருகே கரையை கடந்த கஜா புயல் பெரும் சேதங்களை உண்டாக்கி சென்றது. குறிப்பாக நாகை, தஞ்சை, வேதாரண்யம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க் கணக்கான கால் நடைகள் உயிரிழந்திருக்கின்றன.
நிவாரணப் பணிகளும் மீட்புப் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் தன்னார்வளர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய அரசு போதிய நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் புயல் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்குவதில்லை. 5000 கோடி கேட்டா 500 கோடி தராங்க. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் மத்திய அரசு மாநில அரசுகளை கண்டுகொள்வதில்லை என மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக காட்டமாக பேசினார்.