புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (08:48 IST)

சிபிஐ அடுத்து ரிசர்வ் வங்கியுடனும் மத்திய அரசு மோதல்?

சிபிஐ இயக்குனர்களை சமீபத்தில் கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டதால் சிபிஐக்கும் மத்திய அரசுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வைரல் வி. ஆச்சார்யா பேசியபோது, 'ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியையும், சுதந்திரத்தையும் பலவீனப்படுத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் என மத்திய அரசுக்கு மறைமுக எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ' வங்கிகள் கடன்களை வாரி வழங்க வைத்தது தான் வாராக்கடன்களை பெருக்கியது என ரிசர்வ் வங்கியை சாடினார்.

இந்த நிலையில் இன்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஜெனரல் உர்ஜித் பட்டேல் அவர்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பு இருப்பதாக ஒரு வதந்தி டெல்லி வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்த வதந்தி உண்மையானால் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் ஏற்பட்டுள்ள மறைமுக மோதல் வெளிச்சத்துக்கு வரும் என கூறப்படுகிறது