வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (16:30 IST)

2 ஜி வழக்கில் அமலாக்கத்துறையையடுத்து சி.பி.ஐ.யும் மேல்முறையீடு

2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா  மற்றும் கருணாநிதியின் மகளான எம்.பி. கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ள நிலையில் சி.பி.ஐ.யும் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இது திமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோரின் தரப்பின் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளதாக ஏ.என்.ஐ எனப்படும் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் சிபிஐ தரப்பிலும் இன்று மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.