வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 மார்ச் 2018 (17:56 IST)

என் பெயர் அரசியல்வாதி: சிபிஐயிடம் எடக்கு மடக்காக பதில் கூறிய கார்த்திக் சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பத்தை ஐந்து நாள் விசாரணை செய்ய  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்றுடன் அந்த ஐந்து நாட்கள் முடிந்துவிட்தால் இன்று மிண்டும் கார்த்திக் சிதம்பரத்தை நீதிமன்றத்தின் முன் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் செய்தனர்.

இந்த நிலையில் மேலும் சில நாட்கள் கார்த்திக் சிதம்பரத்தை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. விசாரணைக்காவல் ஐந்து நாட்கள் என்றாலும் டெல்லியில் இருந்து மும்பை சென்று வர, போக்குவரத்து உள்பட ஒருசில காரணங்களால் நான்கு நாட்கள் மட்டுமே அவரிடம் விசாரணை செய்ய முடிந்ததாகவும், எனவே இன்னும் அவரிடம் விசாரிக்க வேண்டியதுள்ளது என்றும் சிபிஐ தரப்பில் வாதாட்டப்பட்டது.

அதுமட்டுமின்றி கார்த்திக் சிதம்பரம் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்றும், உங்களின் பெயர் என்ன என்று கேட்டால் நான் அரசியல்வாதி என கார்த்தி சிதம்பரம் பதில் கூறுவதாகவும், எங்களின் கேள்விகளுக்கு கார்த்தி சிதம்பரம் சரியான பதில் அளிக்கவில்லை என்றும் சிபிஐ தனது வாதத்தில் கூறியுள்ளது. இதுகுறித்து இன்னும் சில நிமிடங்களில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது.