வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 மார்ச் 2018 (17:20 IST)

கார்த்தி சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ முடிவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திரம் விசாரணை நடத்தி வரும் சிபிஐ உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளது.

 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து சென்னையில் பிப்ரவரி 28ஆம் தேதி சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது.
 
கைது செய்த கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசரரிக்க சிபிஐக்கு நேற்று உத்தரவிட்டது. ஒருநாள் கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 
 
கார்த்தி சிதம்பரத்திடம் ஒருநாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும் இதனால் விசாரிக்க மேலும் 14 நாட்கள் காவல் தேவை என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
 
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் ஆகியோர் அளித்த வாக்குமூலமே கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்ய முக்கிய காரணமாய் அமைந்தத நிலையில் கார்த்திக் சிதம்பரம், இந்திராணி முகர்சி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோரை மும்பை சிறையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. 
 
இதையடுத்து 5 நாட்கள் காவல் முடிந்து கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் விசாரணையில் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என்றும் இதனால் மேலும் காவல் நாட்கள் நீடிக்க வேண்டும் என்று என்று கோரியது. இதனையடுத்து கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 3 நாட்கள் காவல் வழங்கப்பட்டது.   
 
மூன்று நாள் காவல் நாளையுடன் முடிவடைகிறது. கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராததால் அவரிடம் இருந்து சிபிஐ எந்த தகவலையும் பெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அப்போது மீண்டும் காவல் நாட்களை நீட்டிக்க கோர முடியாது என்பாதல் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.