1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 ஜூன் 2018 (19:48 IST)

வரும் ஜூலை 2ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்!

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ஆம் தேதி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுக்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களூரில் அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ஆம் தேதி தலைவர் மசூது உசைன் தலைமையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும், இதற்காக நான்கு மாநிலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.