காவிரி பிரச்சனைக்காக ரஜினி உண்ணாவிரதம்?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பந்த் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் காவிரி பிரச்சனை குறித்த எந்த போராட்டத்திலும் ரஜினிகாந்த் கலந்து கொள்ளாமல் இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்களும், நெட்டிசன்களும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினி உண்ணாவிரதம் இருக்கும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
மேலும் வரும் 8ஆம் தேதி நடிகர் சங்கம் நடத்த திட்டமிட்டுள்ள அறப்போராட்டத்திலும் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஏற்கனவே கமல் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே.