திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (21:51 IST)

வி.சி.க தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு !

சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நாளை பெண்களை இழிவாக பேசும் மனுதர்ம சாஸ்திரத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை குஷ்பு இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவு படுத்திப் பேசியதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசியதாக பாஜக கட்சியைச் சேர்ந்த  அஷ்வத்தாமன் அளித்த புகாரின் அடிப்படையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.