Daily Horoscope
✕

பரபர வேலூர் தேர்தல்களம் – பிரச்சாரம் இன்றோடு முடிவு !

Updated: சனி, 3 ஆகஸ்ட் 2019 (10:17 IST)
வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடியவுள்ளது.

பணப்பட்டுவாடாக் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டது.  இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகளும்  முன்னர் அறிவித்த வேட்பாளரையே மீண்டும் களத்தில் இறக்கியுள்ளனர்.

இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மற்ற பெரியக் கட்சிகளான ம.நீ.ம , அமமுக ஆகிய கட்சிகள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதையடுத்து கடந்த சில வாரங்களாக நடந்து வந்த தேர்தல் பிர்ச்சாரம் இன்று மாலையுடன் முடியவுள்ளது.
இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

எல்லாம் காட்டு

இனி ஸ்மார்ட்போனில் இருந்து எதையுமே திருட முடியாது.. தமிழக அரசின் குவாண்டம் சேஃப் திட்டம்....

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி இதை செய்தே ஆக வேண்டும்.. பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவு...

அரசியலில் ஓய்வு என்பது என்ன ஆச்சு? புதிய அமைப்பை தொடங்கும் டாக்டர் ராமதாஸ்?

சேகர் பாபு விவகாரம்!.. உங்க போதைக்கு நான் ஊறுகாய் இல்ல!.. கூல் சுரேஷ் காட்டம்..

பிச்சாவரம் சதுப்பு நில காடுகளில் இனி பெட்ரோல், டீசல் கிடையாது.. விஜய் அரசின் அதிரடி அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments