Daily Horoscope
✕

அதிக வாக்குகள் பெற்று தந்தால் இன்னோவா கார், தங்கச்சங்கிலி பரிசு: சி விஜயபாஸ்கர் அறிவிப்பு..!

Written By Mahendran
Updated: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (18:44 IST)
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் நகர செயலாளருக்கு இன்னோவா கார், வட்டச் செயலாளருக்கு ஐந்து பவுன் தங்கச்சங்கிலி பரிசாக வழங்கப்படும் என முன்னாள் அதிமுக அமைச்சர் சி விஜயபாஸ்கர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா பன்னீர்செல்வம் என்பவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மதிமுக சார்பில் துரை வையாபுரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இங்கு அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் இங்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், திருச்சி நகர அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்

அப்போது திருச்சி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று, அதிமுகவை வெற்றி பெறச் செய்யும் நகர செயலாளருக்கு இன்னோவா கார் பரிசு தரப்படும் என்றும் வட்ட செயலாளருக்கு ஐந்து பவுன் தங்க சங்கிலி வழங்குவேன் என்றும் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி!.. ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய்!...

நேப்பியர் பாலத்துக்கு கீழ தொங்க விடுவாரு!.. விஜயை கலாய்த்த மேயர் பிரியா...

ஆண்ட்ராய்டு குரோம் பயனர்களுக்கு கூகுள் ஜெமினியின் புதிய வசதி அறிமுகம்! சூப்பர் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் நாளை வாக்கு எண்ணிக்கை!.. வெற்றி யாருக்கு?..

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு 'Z+' பாதுகாப்பு.. மத்திய அரசு அதிரடி..

அடுத்த கட்டுரையில்
Show comments