1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: கன்னியாகுமரி , செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:40 IST)

தேர்தல் பிரச்சாரத்தில் திடிரென சந்தித்துக் கொண்ட பாஜக அதிமுக வேட்பாளர்கள்!

கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலிலும் கடுமையான  வாக்கு வேட்டையில் பரபரத்துக்கொண்டு இருக்கும் போது ஏதாவது ஒரு அதிசயமும் எங்காவது நடை பெற்று  வாக்காளர்கள் மத்தியில் பேசும் பொருளாகும்.
 
அது போன்று ஒரு நிகழ்வு  நாகர்கோவிலில் நடை பெற்றது.
 
பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து க்கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்துக்கொண்டிருந்தஅதிமுக வேட்பாளர்   பசலியான் நசரேயன்,  பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் அருகே வந்து வணக்கம் தெரிவித்ததும், இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டே ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டும்,கை குலுக்கி சென்றார்கள்.