சசிகலாவை நோக்கி அதிமுக வரும்… சி ஆர் சரஸ்வதி ஆருடம்!
அமமுகவின் செய்தி தொடர்பாளர் சி ஆர் சரஸ்வதி சசிகலாவை நோக்கி அதிமுக வரும் எனக் கூறியுள்ளார்.
மார்ச் 3 ஆம் தேதி இரவு அமமுகவின் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை நம்பியுள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அமமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் சசிகலாவை சந்தித்து ஆசி பெற்ற அமமுகவின் செய்தி தொடர்பாளர் சி ஆர் சரஸ்வதி விரைவில் அதிமுக, சசிகலாவை நோக்கி வரும் என்றும் ஜெயலலிதா எப்படி பாகூர் முதல் ஆர் கே நகர் வரை போட்டியிட்டு வென்றாரோ அதுபோல தினகரனும் கோவில்பட்டியில் வெல்வார் என கூறியுள்ளார்.