புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 நவம்பர் 2020 (08:49 IST)

6 மாதங்களுக்கு பின் தமிழகம்-ஆந்திரா இடையே பேருந்து சேவை: தமிழக அரசு ஆணை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முழு ஊரடங்கு உத்தரவு இருந்ததால் அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மாநிலங்களுக்குள் போக்குவரத்துகள் தொடங்கின என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே ஆறு மாதங்களுக்குப் பின்னர் பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
இதன்படி நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவை தொடங்கலாம் என்றும் இரு மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
இந்த அரசாணை காரணமாக வரும் 25-ஆம் தேதி முதல் பயணிகள் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே இபாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது