1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (18:03 IST)

Boy Friend வாடகைக்கு எடுக்கும் போர்ட்டல் தொடக்கம் ! எங்கு தெரியுமா?

கோப்புப் படம்
இந்தியாவில் மேலை நாட்டுக் கலாச்சாரம் படையெடுத்து வரும் நிலையில் பாய்பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் புதிய போர்டல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காலம் மாறிவரும் போது, நாகரிகமும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. அண்மைக்காலமாக இளைஞர்கள் சிங்கில்ஸ், காதலர்கள், 90ஸ் கிட்ஸ், 20ஸ் கிட்ஸ் என்று இவர்களைப் பற்றிய ஒவ்வொரு மீம்ஸும்  கவனிகப்பட்டு வாருகிறது.

இதில், 90ஸ் கிட்ஸைக் காட்டிலும், 20ஸ் கிட்ஸ்குக்கு விரைவில் காதலர்களும், திருமணமும் நடந்து விடுவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், காதலால் ஏற்பட்டு பின் பிரிந்தவர்களுக்கும், காதலால் ஏமாற்றம் அடைந்தவர்களுக்கும், தனிமையில் தவிக்கும் பெண்கள் பேசுவதற்கு ஆண்  நண்பர் தேவை என்று ToYBoY என்ற இந்த போர்டரில் ஒரு பதிவிட்டு புக் செய்தால் போதும்!  உடனே இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்புகொண்டு ToYBoY போர்டலுக்கான APK பைல் பெறலாம் என்றும் தற்போது பெண்களுக்காக மட்டும் இந்த  பாய்பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.