1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (17:14 IST)

ஓலா ஆட்டோ, கார் சேவைகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

Ola
ஓலா நிறுவனத்தின் ஆட்டோ மற்றும் கார் சேவைகளுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
சென்னை உள்பட பெருநகரங்களில் ஓலா ஆட்டோ மற்றும் கார் சேவை உள்ளது என்பதும் இந்த சேவை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஓலா ஆட்டோ கார் சேவைகளுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளர். ஓலா ஆட்டோவிற்கான கட்டணம் 2.5 கி.மீ. தூரம் வரை ரூ.55 வசூலிக்கப்பட்ட  நிலையில், தற்போது ரூ.110 - ரூ.135 வரை பெறப்படுகிறது என பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
 
ஓலா ஆட்டோ கட்டணம் பீக் ஹவர்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.