திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (12:08 IST)

கணவன் மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை! – மதுரையில் அதிர்ச்சி!

suicide
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் - வான்மதி தம்பதி. விவசாய கூலி தொழிலாளிகளான இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளதாக கூறப்படுகிறது.


 
இந்நிலையில் இன்று வீட்டில் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்த கணவன் மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த சிந்துபட்டி காவல் நிலைய போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பிணவறைக்கு அனுப்பி வைத்துவிட்டு நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களாக குடும்ப சூழல் காரணமாக இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்தாகவும், இந்நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கணவன் மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.